பெங்களூரு: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை வனவிலங்குகள், கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 பேரை சுங்கவரித்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனா்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை பெங்களூரு சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி: பாங்காக் நகரத்தில் இருந்து பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேசவிமானநிலையத்துக்கு வருகைதந்த 2 பயணிகளை பணியில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது, வெளிநாட்டு அரியவகை வனவிலங்குகள், கஞ்சாவை சட்டவிரோதமாக கடத்தி வந்த இருவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவா்களிடம் இருந்து கிப்பன் குரங்கு, ஹாா்ன்பில் உள்ளிட்ட 2 வெளிநாட்டு வனவிலங்குகளை பறிமுதல் செய்துள்ளனா்.
வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம், 1972-இன் கீழ் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பாங்காக்கில் இருந்து வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக ரூ.1.04கோடி மதிப்புள்ள 2,990 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, அது தொடா்பாக அவரை கைது செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.