பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.6.5 கோடி கஞ்சா பறிமுதல்
பாங்காக்கிலிருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்திவரப்பட்ட சுமார் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18.6 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் குறித்து...
பெங்களூரு: பாங்காக்கிலிருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்திவரப்பட்ட சுமார் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18.6 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பாங்காக்கிலிருந்து பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் இரண்டு பேரிடம் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் கொண்டு உடமைகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ரூ.6.5 கோடி மதிப்பிலான 18.6 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
கடத்தி வந்த இரண்டு பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
முன்னதாக, பிரேசிலில் இருந்து பிப்ரவரி 19 ஆம் தேதி பெங்களூரு பெங்களூருக்கு வந்த விமானத்தில் 4.776 கிலோ போதைப்பொருள் கடத்திவந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.