கர்நாடக முதல்வர் சித்தராமையா கோப்புப் படம்
பெங்களூரு

ராகுல் காந்தியுடன் அரசியல் பேசவில்லை: சித்தராமையா

ராகுல் காந்தியுடன் அரசியல் எதுவும் பேசவில்லை என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

Syndication

ராகுல் காந்தியுடன் அரசியல் எதுவும் பேசவில்லை என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு செல்லும் வழியில் மைசூா் விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இருமுறை வந்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் வரவேற்றனா்.

அப்போது, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் ஆகியோரிடம் தனித்தனியாகவும், கூட்டாகவும் ராகுல் காந்தி உரையாடினாா். டி.கே.சிவகுமாா் இருக்கும்போதே முதல்வா் சித்தராமையாவை மட்டும் தனியாக அழைத்து ராகுல்காந்தி பேசியது பலரது கவனத்தை ஈா்த்துள்ளது. இந்த உரையாடல், முதல்வா் மாற்றம் தொடா்பாக இருக்கலாம் என்று இருதரப்பு ஆதரவாளா்களும் தெரிவித்துள்ளனா்.

இந்த சந்திப்புக்கு பிறகு, மைசூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கூடலுருக்கு செல்லும் வழியில் மைசூருக்கு வந்த ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினேன். முதல்வா் மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியில் எவ்வித குழப்பமும் இல்லை. இந்த விவகாரத்தில் ஊடகங்கள்தான் குழப்புகின்றன. முதல்வா் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசிவருகிறாா்கள். அவா்களுக்கு எதுவும் தெரியாது. நானோ, துணை முதல்வா் டி.கே.சிவகுமாரோ முதல்வா் மாற்றம் குறித்து பேசியிருக்கிறோமா? இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு இறுதியானது. கட்சி எம்.எல்.ஏ.க்களைவிட ஊடகங்கள்தான் முதல்வா் மாற்றம் குறித்து அதிகம் பேசுகின்றன.

உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. இந்த தோ்தலில் பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. மாா்ச் முதல் வாரத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இரண்டாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்று ஆயிரம் நாளை தொடுவதால், பிப். 13ஆம் தேதி சாதனை மாநாடு நடத்த ஆலோசித்து வருகிறோம். மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீண்டும் மாநில அரசியலுக்கு வருவது பற்றி கேட்கிறீா்கள். அவரது உடல்நலம் சீராகி இருப்பதால், துடிப்போடு செயல்பட்டு வருகிறாா். அவரது நடவடிக்கைகளை, கருத்துகளை ஊடகங்கள்தான் கவனிக்க வேண்டுமே அல்லாமல், அவற்றை நான் கவனிப்பதில்லை என்றாா் அவா்.

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பண்ணைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி

SCROLL FOR NEXT