முகப்பு
இந்தியா

ராகுல் காந்தியுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்திப்பு!

ராகுல் காந்தியுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்திப்பு பற்றி..

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:31 PM
ராகுலுடன் பிரவீண் சக்ரவர்த்தி
பகிர்:

தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்ரவர்த்தி இன்று சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சு தொடங்காத நிலையில் சோனியா இல்லத்தில் ராகுல் காந்தியுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கோரிக்கை தொடர்பான சர்ச்சை நீடிக்கும் நிலையில், ராகுலுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு பிரவீண் சக்ரவர்த்தி சென்னைக்குத் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

summary

Congress leader Praveen Chakraborty met with Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi in Delhi today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.