விபத்தில் கணக்காளர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில், தனியார் நிறுவனக் கணக்காளர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில், தனியார் நிறுவனக் கணக்காளர் உயிரிழந்தார்.
பெங்களூரு பி.பி. லேஅவுட்டைச் சேர்ந்த ஸ்ரீநிதி (34), தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
குமாரசாமி லேஅவுட் அருகே உள்ள நைஸ்சாலை மேம்பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீநிதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.