முகப்பு
பெங்களூரு

3 பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பெங்களூரில் 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:51 AM
பகிர்:

பெங்களூரில் 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்பாவி பிரதான சாலையில் எஸ்.ஜே.பி.நகரில் சனிக்கிழமை இரவு நடந்து சென்ற கெளரி என்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 55 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக விஜய நகர் காவல் சரக போலீஸார் விசாரிக்கின்றனர்.
பைரேஸ்வரா நகரைச் சேர்ந்ஹவர் சுதா. இவர் சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஆட்டோவில் வந்து வீட்டின் அருகே இறங்கி, நடந்து சென்றபோது,  மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சந்திராலேஅவுட் காவல் சரக போலீஸார் விசாரிக்கின்றனர்.
மல்லேஸ்வரம் கோயில் அருகே சுதா,  சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்து சென்றபோது,  மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மல்லேஸ்வரம் காவல் சரக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.