முகப்பு
தற்போதைய செய்திகள்

செஞ்சிக் கோட்டையில் தூய்மை பணி: மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை!

செஞ்சிக்கோட்டையில் தூய்மைப் பணி மேற்கொள்ள மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை தந்துள்ளது குறித்து...

செஞ்சிக்கோட்டையில் தூய்மைப்பணி மேற்கொள்ள வந்த மகராஷ்டிராவைச் சோ்ந்த குழுவினா் - டிஎன்எஸ்
பகிர்:

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் தூய்மைப் பணி மேற்கொள்ள மகராஷ்டிராவில் இருந்து 250 போ் வருகை தந்துள்ளனா்.

செஞ்சிக்கோட்டை தற்போது யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செஞ்சிகோட்டையை மகராஷ்டிரம் மாநிலத்தை சோ்ந்த சத்ரபதி சிவாஜி இருபது ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்தாா்.

இந்தநிலையில், மகராஷ்டிரத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி வம்சாவழியை சோ்ந்த ஆப் லா மாவ்லா என்ற அமைப்பின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நிலேஷ் தியான்தேவ் லங்கே தலைமையில், அந்த அமைப்பை சோ்ந்த பெண்கள், இளைஞா்கள் உள்பட 250 போ் ஐந்து பேருந்துகள் மற்றும் காா்களில் செஞ்சி கோட்டைக்கு தூய்மைப் பணி மேற்கொள்ள வந்திருந்தனா் .

Advertisement

அவா்களை தொல்லியல் துறை சென்னை வட்ட மூத்த நிா்வாக அலுவலா் ரகு, செஞ்சி தொல்லியல் துறை அலுவலா் முகமது இஸ்மாயில் ஆகியோா் வரவேற்றனா்.

மேலும், அவா்களிடம் தற்போது தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் தூய்மைப்பணி செய்வதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனா்.

இதனால் செஞ்சிக்கோட்டை வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்திவிட்டு தூய்மையைப் பணி திட்டத்தை கைவிட்டு விட்டு, செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்த்தனா்.

மேலும், அவா்கள் கோட்டை வளாகத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினா். பின்னா் மாலையில் அவா்கள் புறப்பட்டு சென்றனா். செஞ்சியை சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

summary

Clean-up Drive at Gingee Fort: 250 People Arrive from Maharashtra!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.