உங்களுக்கும் வரலாம் பேரிடர் எச்சரிக்கை ஒலி! பதற்றப்பட வேண்டாம்!!
பேரிடர் காலங்களில் எச்சரிப்பதற்காக நாடு முழுவதும் இன்று செல் ப்ராட்காஸ்ட் எச்சரிக்கை சோதனை
பேரிடர் காலங்களில் எச்சரிப்பதற்காக செல் ப்ராட்காஸ்ட் எச்சரிக்கை சோதனையை நாடு முழுவதும் மத்திய அரசு இன்று சோதனை மேற்கொள்கிறது.
வெள்ளம், நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக செல் ப்ராட்காஸ்ட் (Cell Broadcast) சோதனையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று மேற்கொள்கிறது.
இந்தச் சோதனையின்போது, மக்களின் செல்போன்களில் திடீர் அலாரம் ஒலிக்கும், அதிர்வும் ஏற்படும். உண்மையான பேரிடர் சமயங்களின்போது, மக்களுக்கு அவசர எச்சரிக்கைகளை தெரிவிப்பதற்கான அமைப்பை சோதிப்பதே இதன் நோக்கம்.
Advertisement
Advertisement
சோதனையின்போது, உங்கள் செல்போன்களில் திடீரென அலாரம் வந்தால், அச்சப்படத் தேவையில்லை என்றும், வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் எல்லை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களுக்கு இந்தச் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
NDMA to test cell broadcast alert system across India on May 2
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.