முகப்பு
இந்தியா

கைகளை வெட்டுவோம்! சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 11:10 am IST
பாகிஸ்தான் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் முசாதிக் மாலிக் - கோப்புப்படம்
பகிர்:

சிந்து நதி தண்ணீரில் பாகிஸ்தானுக்கான பங்கீட்டில் உரிமை கோரும் கைகளை வெட்டுவோம் என்று அந்நாட்டின் அமைச்சர் முசாதிக் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை, 1960 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மேற்கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தையும், அதன் கட்டமைப்பையும் பாகிஸ்தான் ஒழிக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாநிலங்களின் விவசாயமும் குடிநீர்த் தேவையும் சிந்து நதி நீரையே நம்பி இருக்கிறது. நீண்ட நாள் சிந்து நதி நீர் நிறுத்திவைக்கப்பட்டால், அம்மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் முசாதிக் மாலிக் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அமைச்சர் முசாதிக் மாலிக் பேசுகையில், ”அண்டை நாட்டு பிரதமரால் கட்டுப்படுத்தப்படும் ஒரு குழாய் உள்ளது. அதில், பாகிஸ்தானுக்கு ஒரு துளி நீர்கூட செல்லாது என்று அவர் கூறுகிறார்.

எங்கள் பங்கு நீரின் மீது உரிமை கோரும் கைகளை வெட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அமைச்சர் தரார் பேசுகையில், “சிந்து நீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளாததால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்குரிய உரிமைகள் சர்வதேச சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றும் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தின் கீழ் நீரைப் பெறுவதற்கான உரிமை எங்கள் மக்களுக்கு உள்ளது.” எனத் தெரிவித்தார்.

சில நாள்களுக்கு முன்னதாக, பாகிஸ்தானின் நீர் பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தல் விளைவித்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

summary

We will cutoff hands! Pakistan warns India over the Indus waters issue!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments