பெங்களூரு

கஜா  புயல் எச்சரிக்கை: காரைக்கால், மயிலாடுதுறை தடத்தில் ரத்தாகும் ரயில்கள்

DIN

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை தடத்திலான விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் போக்குவரத்து நவ. 15, 16 ஆகிய தேதிகளில் முழுமையாகவும், பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பலத்த காற்று வீசக் கூடும் எனவும், கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவ. 15-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில் சேவைகள் :  காரைக்கால் - சென்னை விரைவு ரயில், வேளாங்கண்ணி - சென்னை (இணைப்பு) விரைவு ரயில், மன்னார்குடி - சென்னை விரைவு ரயில், வேளாங்கண்ணி - காரைக்கால் பயணிகள் ரயில், காரைக்கால் - தஞ்சாவூர் பயணிகள் ரயில், விழுப்புரம் - மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்கள் வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 
மேலும், எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயில் நாகையுடனும்,  திருச்சிராப்பள்ளி - காரைக்கால் பயணிகள் ரயில் திருவாரூருடனும், கே.எஸ்.ஆர். பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரயில் மயிலாடுதுறையுடனும் நிறுத்தப்படுகின்றன. 
நவ. 16-ஆம் தேதி பகுதியளவில் நிறுத்தப்படும் ரயில் சேவைகள்:  காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் திருவாரூருடன் நிறுத்தப்படுகிறது.  காரைக்கால் - கே.எஸ்.ஆர். பெங்களூரு பயணிகள் ரயில் மயிலாடுதுறையிலிருந்து இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT