நாளை குடிநீர் குறைதீர் முகாம்
பெங்களூரு நகர மேற்கு 2-ஆம் துணை மண்டலத்தில்குடிநீர் குறைதீர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 9) நடைபெறுகிறது.
பெங்களூரு நகர மேற்கு 2-ஆம் துணை மண்டலத்தில்குடிநீர் குறைதீர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு 2-வது துணை மண்டலத்தில் உள்ள நாகர்பாவி, அன்னபூர்ணேஸ்வரி நகர், எஸ்.எம்.வி.லேஅவுட், மூடளுபாளயா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீர் குறைதீர் முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை
நடைபெறுகிறது.
தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத்தில் தாமதம், கழிவுநீர் இணைப்பு, வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுதல் போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 23212181 என்று கூறப்பட்டுள்ளது.