மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா
ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தது குதிரை பேரமா? என ஆதவ் அர்ஜுனா கேள்வி...
வரும் தேர்தலில் மு.க. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் இணைவார்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (மே 25) தெரிவித்தார்.
திமுக - அதிமுக இணைந்து தேர்தல் அரசியலை சந்திப்பார்கள் என்றும், ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தது குதிரை பேரமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றவில்லை என்றும், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பனையூர் அலுவலகத்துக்கு வந்தே தவெகவில் இணைந்ததாக விளக்கம் அளித்தார்.
Advertisement
Advertisement
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
''பாஜக, அதிமுகவுடன் இணைந்து மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆட்சியை திமுக உருவாக்க முயன்றது. தவெகவில் இணைவோர் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் கிடையாது.
தவெகவின் கட்சி அலுவலகத்தில் தான் 3 பேரும் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
நேர்மையாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மரியாதை நிமித்தமாக என்னை 3 பேரும் சந்தித்தனர். பின்னர் முதல்வரை சந்தித்தனர்.
ஒரு கட்சியில் மூன்றில் இரு பங்கு இன்னொரு கட்சியில் சேர்வது குதிரை பேரம் கிடையாது. அதிமுகவினரை தவெகவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
மு.க. ஸ்டாலின் தோல்விக்கு அவரின் மருமகன் சபரீசனும், மகன் உதயநிதியும் காரணம். எல்லா துறைகளில் ஊழல் செய்துள்ளனர். ஊழல் செய்த பணத்தை ஒவ்வொரு தொகுதியிலும் ரூ. 30 கோடி செலவழித்துள்ளனர். இருந்தும் தோல்வியையே சந்தித்துள்ளனர்.
பணம், சாதி, மத அரசியலை புறக்கணித்து, சாதி, சமய பேதமற்ற அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். பழமையான அரசியலை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்.
ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளையும் தவெக அன்போடு வரவேற்கும். எம்.ஜி.ஆரையும் அண்ணாவையும் எங்கள் தலைவர் முன்னிலைப்படுத்தினார். அதனால், அவர்களின் தொண்டர்களை என்றுமே வரவேற்போம்.
எடப்பாடி பழனிசாமியும், மு.க. ஸ்டாலினும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்வார்கள்'' என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.
M.K. Stalin and EPS Will Join Hands TVK Minister Aadhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.