FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேட்மிண்டன் விளையாடிய ஆதவ் அர்ஜுனா - அன்புமணி!

ஆதவ் அர்ஜுனா - அன்புமணி இணைந்து பேட்மிண்டன் விளையாடியது பற்றி...

Updated On : 16 ஜூலை 2026, 10:51 am IST
பேட்மிண்டன் விளையாடிய ஆதவ் அர்ஜுனா - அன்புமணி - x
பகிர்:

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இணைந்து இன்று காலை பேட்மிண்டன் விளையாடினர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சீனியர் பேட்மிண்டன் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தொடக்கிவைத்தனர்.

தொடர்ந்து, அங்கிருந்த பேட்மிண்டன் வீரர்களுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனாவும், அன்புமணி ராமதாஸும் விளையாடினர்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “விளையாட்டு துறைக்கு அலுவலகமே நேரு விளையாட்டு அரங்கில்தான் இருக்கிறது என்பது வித்தியாசமான அணுகுமுறை. காலை 6 மணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் வருகிறார் என்றால் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இதுவரை இருந்த விளையாட்டு அமைச்சர்களைவிட ஆதவ் அர்ஜுனா வித்தியாசமானவர். போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முதல்வர் விஜய் மாரத்தான் ஓடியது வரவேற்கத்தக்கது” எனப் பாராட்டு தெரிவித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட வலுவான இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும், “தவெக அரசுக்கு அரசியலா, விளையாட்டா எனக் கேட்டால் விளையாட்டைதான் சொல்வோம். மது, போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு நல்ல தொகை ஒதுக்கப்பட்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். இன்னும் 3 ஆண்டுகளில் சர்வதேச அளவிலான தலைமை விளையாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்குகளிலும் வீரர்களுக்கான தங்கும் இடங்கள் முழுவதிலும் குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்த முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

summary

Aadhav Arjuna and Anbumani played badminton together!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments