துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி காயம்
நிலத் தகராறில் இருவருக்கு ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால் சுட்டத்தில் விவசாயி காயமடைந்தார்.
நிலத் தகராறில் இருவருக்கு ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால் சுட்டத்தில் விவசாயி காயமடைந்தார்.
பெங்களூரு ஊரகப் பகுதியான ஆனேக்கல் வட்டம் லிங்கசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சாதப்பாவுக்கும் இடையே நீண்ட நாள்களாக, நிலத் தகராறு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராமு தனது நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சாதப்பா தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ராமுவை நோக்கிச் சுட்டாராம். இதில் ராமுவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சாதப்பா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காயமடைந்த ராமு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜிகினி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.