பெங்களூரு

அமைச்சர் மீதான நில அபகரிப்பு புகார்: முதல்வர் விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தல்

DIN

பொதுப்பணித் துறை அமைச்சர் ரேவண்ணா மீதான நில அபகரிப்பு புகார் குறித்து முதல்வர் குமாரசாமி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா
வலியுறுத்தினார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான ஏ.மஞ்சு, பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தனது அதிகாரத்தை பயன்படுத்தி, 54 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தேவெ கெளடா குடும்பத்தினர் எந்த கருத்தையும் கூறாமல் மெளனமாக உள்ளனர். 
அமைச்சர் பதவி வகிப்பவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு நிலத்தை அபகரித்துள்ளது, வேலியே பயிரை மேயும் கதையாக உள்ளது. எனவே, இதுகுறித்து முதல்வர் குமாரசாமி விளக்கம் அளிக்க வேண்டும். தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே நிலத்தை அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மற்றவர்களை குறைகூற முதல்வர் குமாரசாமியால் முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT