பெங்களூரு

"சிறந்த மாணவர்களை உருவாக்க அடிப்படைக் கட்டுமான வசதி அவசியம்'

DIN

சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளிகளில் அடிப்படைக் கட்டுமான வசதி இருப்பது அவசியம் என புனித ஆன்டீரீவ்ஸ் கல்விக் குழுமத்தின் இயக்குநர் ஆஷீஷ் இமானுவேல் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை வின்மோர் அகாதெமி தொடக்க விழாவில் பங்கேற்று அவர் பேசியது: சிறந்த பாடத் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை புகட்டமுடியும் என்பது உண்மைதான். என்றாலும், சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளிகளில் அடிப்படைக் கட்டுமான வசதிகள் இருப்பதும் அவசியம்.
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கல்வியை புகட்டும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல, பள்ளிகளில் அடிப்படைக் கட்டுமான வசதிகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 1-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்புகள் வரை கட்டுமானங்களில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். சிறு வயது பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்ல ஆர்வத்தை ஏற்படுத்தினாலே அவர்கள் கல்வியை கற்பதிலும் ஆர்வமாக இருப்பார்கள். 
பள்ளி வளாகத்தின் சூழல் சரியில்லை என்றால், பள்ளிக்குச் செல்ல ஆர்வம் ஏற்படாது. குறிப்பாக மாணவர்களை ஈர்க்கும் வகையிலான அடிப்படைக் கட்டுமான வசதி இருப்பது அவசியம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பிராவிடன்ட் குழுமத்தின் மேலாண் இயக்குநர் அஷீஷ் பூர்வங்கரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.                                                                              

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT