பெங்களூரு

லஞ்சம் பெற்றதாக கிராம பஞ்சாயத்து அதிகாரி கைது

DIN

குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக கிராம பஞ்சாயத்து அதிகாரியை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தாவணகெரேவை சேர்ந்த ஒருவர், தான் புதிதாக தொடங்க உள்ள வேளாண் பொருள் தொழில்சாலைக்கு உரிமம் பெற கிராம பஞ்சாயத்து அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு கிராம பஞ்சாயத்து அதிகாரியான சுவாமிலிங்கப்பா உரிமம் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் அளிக்குமாறு கேட்டாராம். அதன்படி, செவ்வாய்க்கிழமை சுவாமிலிங்கப்பாவிடம் ரூ.30 ஆயிரத்தை அவர் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் சுவாமிலிங்கப்பாவை கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட சுவாமிலிங்கப்பாவிடம் தாவணகெரே மாவட்ட லஞ்ச ஒழிப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT