பெங்களூரு

"மக்களவைத் தேர்தலில் மதவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவது முக்கியம்'

DIN

மக்களவைத் தேர்தலில் மதவாதத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமாகும் என்று ஜனகனமண அமைப்பின் நிர்வாகியும், கர்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான ரவிவர்மகுமார் தெரிவித்தார்.
இது குறித்து தும்கூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  தும்கூரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடாவுக்கு ஜனகனமண அமைப்பு ஆதரளிக்கிறது.  தேவெகெளடா மிகவும் பொருத்தமான வேட்பாளர். நாடாளுமன்றத்தில் அவரது குரல் கர்நாடகத்தின் உரிமைக்குரலாக ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.  மதசார்பின்மை, கருத்து சுதந்திரம் போன்ற கொள்கைகளில் தீராத பிடிப்புக்கொண்டவர் தேவெகெளடா.  அதேபோல, மண்டியா தொகுதியில்மஜத வேட்பாளர் நிகில் குமாரசாமி, ஹாசன் தொகுதியில் மஜத வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும் எங்கள் அமைப்பு ஆதரவளிக்கிறது.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கருத்து சுதந்திரத்தை நசுக்கியவர் தான் பிரதமர் மோடி.  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாக பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனந்த்குமார் ஹெக்டே கூறுகிறார். இதை அனுமதிக்கலாமா?  நாட்டில் மதவாதம் தலைவிரித்தாடுகிறது. மக்களவைத் தேர்தலில் மத வாதத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமாகும்.  இந்த தேர்தல் நாட்டுக்கும் மோடிக்கும் இடையிலான சண்டையாகும்.  பாஜகவின் தோல்வியை உறுதி செய்ய மதச்சார்பற்ற கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.  இந்திய வரலாற்றில் தற்போது நடப்பது போன்ற மக்களவை தேர்தல் எப்போதும் நடந்ததில்லை.  பிரதமர் மோடி பெயரில் மட்டும் வாக்கு கேட்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும்.  மதவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவது முக்கியமே தவிர, குடும்ப அரசியல் அல்ல.  பணமதிப்பிழப்புக்கு பிறகு வேலைவாய்ப்புகள் பறிபோயின.  இளைஞர்கள் இதை மறக்கக் கூடாது. வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிய கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். கர்நாடகத்தில் மதச்சார்பற்ற தலைவர்களான எச்.டி.தேவெ கெளடாவும், சித்தராமையாவும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.  இது கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT