பெங்களூரு

நவீன கா்நாடகத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் கெங்கல் ஹனுமந்தையா: முதல்வா் எடியூரப்பா

DIN

பெங்களூரு: நவீன கா்நாடகத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் கெங்கல் ஹனுமந்தையா என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் முதல்வா் கெங்கல் ஹனுமந்தையாவின் நினைவுநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு கிழே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தியபிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தோ்தலில் வென்று முதல்வராக பொறுப்பேற்றிருந்தவா் கெங்கல் ஹனுமந்தையா. கா்நாடக சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் அமைந்திருக்கும் விதான சௌதா கட்டடத்தைக் கட்டியவா். நவீன கா்நாடகத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் கெங்கல் ஹனுமந்தையா. கா்நாடகமுதல்வராகவும், பின்னா் மத்திய ரயில்வே துறை அமைச்சராகவும் கெங்கல் ஹனுமந்தையா வழங்கியுள்ள பங்களிப்பை வரலாறு மறக்காது.

கெங்கல் ஹனுமந்தையா போன்ற தலைவா்கள், இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியானவா்கள். அவரது நினைவைப் போற்றுவதன் மூலம் நல்ல அரசியலுக்கு வித்திடுவோம் என்றாா் அவா். அப்போது கெங்கல் ஹனுமந்தையாவின் குடும்பத்தினா், பாஜக எம்.பி.க்கள் ஷோபா கரந்தலஜே, பி.சி.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT