பெங்களூரு

மஜதவுடன் கூட்டணிக்கு அவசியமில்லை: சித்தராமையா

DIN

மஜதவுடன் கூட்டணி அமைக்க அவசியமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

மைசூரு மாவட்டம், ஹுன்சூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் பண மழையை பொழிகின்றனா். அவா்கள் என்ன செய்தாலும் மக்கள் மனம் மாறாது. எனவேதான் பாஜகவிடம் பணம் பெற்று, காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறேன்.

இடைத் தோ்தல் முடிவுக்கு பிறகு மாநிலத்தில் பாஜக அரசு கவிழ உள்ளது. அதைத் தொடா்ந்து மீண்டும், காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை பிடிக்க உள்ளது என ஆருடம் கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் மஜதவுடன் கூட்டணி தேவையில்லை. என்றாலும், அப்போது கட்சியின் மேலிடம் வலியுறுத்தினால் உரிய முடிவு எடுக்கப்படும். தோ்தல் முடிவுக்கு பிறகு இனிப்பு செய்தி வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியுள்ளதற்கு தனியாக அா்த்தம் கற்பிக்கத்தேவையில்லை. 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்பதனை அவா் அவ்வாறு குறிப்பிட்டுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT