பெங்களூரு

பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் புகட்டும்: எடியூரப்பா

DIN

பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் புகட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு,  ஆனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலை எதிரில் ஞாயிற்றுக்கிழமை புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புல்வாமா பயங்கரவாத சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு,  பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 
இந்தப் போராட்டத்தின்போது,  எடியூரப்பா பேசியது:  பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போல பாகிஸ்தான்செயல்பட்டுவருகிறது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகின் பல நாடுகள் கண்டித்துள்ளன.  பிரதமர் மோடி கூறியதுபோல,  பாகிஸ்தான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது;  அதற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்தாக வேண்டும்.  பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தக்க பாடம் புகட்டும்.  உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்று பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தக்க பாடம் புகட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில் சந்தேகம் இல்லை.  பாகிஸ்தானுக்கு எதிராக உலகின் பல நாடுகள் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது. 
நமது ராணுவ வீரர்களின் ரத்தத்துளி வீணாகாது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.  கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு துரோகம் செய்துள்ளது. அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் லாகூருக்கு பேருந்துப் பயணம் மேற்கொண்டார்.  ஆனால், கார்கிலில் பயங்கரவாதிகளை நுழைவதற்கு உதவி செய்து பாகிஸ்தான் இந்தியாவுக்கு துரோகம் செய்தது.  இப்படிப்பட்ட பாகிஸ்தானுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார் அவர். 
 இந்தப் போராட்டத்தில் பாஜக எம்.பி. ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT