ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசை நம்ப வேண்டும்: நிர்மலா சீதாராமன்
ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசை நம்ப வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசை நம்ப வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிந்தனையாளர் மன்றத்தின் கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பேசியது:-
பாஜக மீது மக்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேக்க நிலையில் இருந்த இந்தியாவில் உண்மையான வேலை நடந்துவருவதால், இதுகுறித்து யாரும் குறை கூறக்கூடாது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை இழக்க மக்கள் தயாராக இல்லை. ராமர் கோயில் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவை மக்கள் தண்டித்துவிடக் கூடாது. ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது.
ராமர் கோயில் கட்டப்படாததால் பாஜகவை தண்டித்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள மத்திய அரசு, ராமர் கோயில் கட்ட உபரிநிலத்தை ஒதுக்க கேட்டுக்கொண்டுள்ளது.
கோயில் கட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டி தேர்தலில் பாஜகவை தோற்கடித்துவிடாதீர்கள் என்றார். இதையடுத்து, பங்கேற்பாளர் ஒருவர், "பாகிஸ்தானில் இருந்த ஒசாமா பின்லேடனை துரத்தி கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கையை போல புல்வாமாவுக்குப் பதிலடியாக இந்தியாவால் ஏன் செயல்படமுடியவில்லை?" என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்து நிர்மலாசீதாராமன் பேசுகைல்,"புல்வாமா சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுக்கமுடியாத நிலை, இதுதொடர்பானமக்களின் கோபத்தை நன்றாக உள்வாங்கியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக பதிவுசெய்துள்ளோம்' என்றார் அவர்.