பெங்களூரு

டிப்ளமோ பொது நுழைவுத் தேர்வு அட்டவணையில் மாற்றம்

DIN


டிப்ளமோ பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கர்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவர்கள்,  லேட்டரல் என்ட்ரி திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில்(பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு 3-ஆவது செமஸ்டரில் சேர்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத் தேர்வு ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  மாணவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப,  டிப்ளமோ பொது நுழைவுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  ஜூலை 21-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும்.  ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணிவரை 180 மதிப்பெண்களுக்கு மாணவர்களின் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வும்,  அன்று மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிநாடு மற்றும் எல்லைப்பகுதி கன்னடர்களுக்காக கன்னட மொழித் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு  ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT