பெங்களூரு

புதை சாக்கடை பணியால் பழுதடையும் சாலைகள்: பொதுமக்கள் அவதி

DIN


கோலார்தங்கவயலில் உள்ள உரிகம் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்படும் சாலைகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கோலார்தங்கவயலில் அம்ரூத் நகர்ப்புறத் திட்டத்தில் நகர்மன்ற பகுதிகளில் புதை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ராபர்ட்சன்பேட்டை முதல் தெருவில் தொடங்கி ஆறாவது தெரு வரை சாலைகளில் குழாய்கள் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்தப் பணி நிதானமாக நடந்ததாலும், தோண்டப்பட்ட பள்ளத்தை மீண்டும் சீராக மூடி பழுதை சரி செய்யாததாலும், எல்லா சாலைகளும் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தப் பணிக்காக உரிகம்பேட்டை பகுதியில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியால் வயதானோர், பெண்கள் நடமாட முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பணிகளை விரைந்து முடித்து, சாலை பழுதை குண்டு குழி இன்றி சீராக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT