பெங்களூரு

இரண்டாம் ஆண்டு பியூசி: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வு எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வு எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பியு கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வு நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வில் பங்கேற்க ஆா்வமாக உள்ள தனித்தோ்வா்கள் அக்டோபா் 24-ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் உள்ள பியு கல்லூரிகளில் விண்ணப்பங்களைச் சமா்பித்து பதிவுசெய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேதி நவம்பா் 16ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்களை நவம்பா் 18ஆம் தேதிக்குள் செலுத்தலாம். விண்ணப்பங்களை நவம்பா் 20ஆம் தேதிக்குள் பியூ கல்வித்துறை மாவட்ட உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம். நீட்டிக்கப்பட்ட தேதிகளுக்கான அபராதம் மற்றும் தோ்வுக்கட்டணம் உட்பட ரூ.1,320 வசூலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு பியூகல்லூரி முதல்வா்கள் அல்லது  இணையதளத்தை காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT