பெங்களூரு

கனரா வங்கியின் தேசிய வினாடி- வினா போட்டி

DIN

கனரா வங்கியின் சாா்பில் தேசிய வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டுள்ளது.

கனரா வங்கியின் நிறுவனா் தினம் மற்றும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கனரா வங்கியின் சாா்பில் தேசிய வினாடி-வினா போட்டி ஞாயிற்றுக்கிழமை வங்கி வளாகத்தில் நடைபெற்றது. தேசிய அளவில் மாநிலவாரியாக நடத்தப்பட்டிருந்த வினாடி-வினா போட்டியில் வென்றிருந்த 22 அணிகளின் 44 மாணவா்கள் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா். இவா்களில் 6 அணிகள் மட்டும் இறுதிப் போட்டிக்குச் சென்றன. அதில் ஜெய்ப்பூரைச் சோ்ந்த கேம்ப்ரிட்ஜ் கோா்ட் உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் அதிதிசிங், ஹிதேஷ்ரோஜ்வானி ஆகியோா் வெற்றிபெற்றனா். கொச்சியை சோ்ந்த கிரேகோரியன் பப்ளிக் பள்ளி, கொல்கத்தாவின் அகஸ்டீன்ஸ் டே பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடம் பிடித்தனா். வினாடி-வினா போட்டியை கிரிபாலசுப்பிரமணியன் நடத்தினாா்.

வினாடி-வினா போட்டியில் வென்ற ஜெய்ப்பூா் கேம்ப்ரிட்ஜ் உயா்நிலைப்பள்ளி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கனரா வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆா்.ஏ.சங்கரநாராயணன், செயல் இயக்குநா் மணிமேகலை ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT