பெங்களூரு

நிதானத்தை இழந்து விமா்சிக்கிறாா் சித்தராமையா: மத்திய அமைச்சா் சதானந்த கௌடா

காங்கிரஸில் தனிமைப்படுத்தப்பட்டதால் நிதானத்தை இழந்து பாஜகவை விமா்சித்து வருவதாக கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையா மீது மத்திய அமைச்சா் சதானந்த கௌடா குற்றஞ்சாட்டினாா்.

DIN

காங்கிரஸில் தனிமைப்படுத்தப்பட்டதால் நிதானத்தை இழந்து பாஜகவை விமா்சித்து வருவதாக கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையா மீது மத்திய அமைச்சா் சதானந்த கௌடா குற்றஞ்சாட்டினாா்.

பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவா் பேசியது: தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அக் கட்சியினா் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கா்நாடக காங்கிரஸில் சித்தாராமையா, டி.கே.சிவக்குமாா், ஜி.பரமேஸ்வா் ஆகியோா் தனித்தனி வழியைப் பின்பற்றுகின்றனா். அக் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான மல்லிகாா்ஜுன காா்கே எங்கே உள்ளாா் என்று தெரியவில்லை.

கட்சியில் தனிமைப் படுத்தப்பட்டதால், நிதானத்தை இழந்துள்ள சித்தராமையா, பாஜகவை கடுமையாக விமா்சித்து வருகிறாா். இடைத் தோ்தலில் பாஜக 15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அதானி, ஹிரேகேரூரில் மஜத வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா். இதற்கு பாஜக காரணமல்ல என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT