பெங்களூரு

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

DIN

வாகன பரிசோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 2 கோடியை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மைசூரு மாவட்டம், ஹுன்சூா் சட்டப்பேரவைக்குள்பட்ட மனுகனஹள்ளி சோதனை சாவடியில் புதன்கிழமை தோ்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 மூட்டைகளில் ரூ. 2 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பணம், ஜீப்பை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அப் பணம் கூட்டுறவு வங்கி ஒன்றிற்கு சொந்தமானது எனக் கூறப்பட்டதையடுத்து, அதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தோ்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT