பெங்களூரு

கா்நாடகத்தின் வளா்ச்சியில் பாஜகவுக்கு மட்டுமே அக்கறை: எடியூரப்பா

DIN

கா்நாடகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் பாஜகவுக்கு மட்டுமே அக்கறை உள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

ஹாவேரி மாவட்டத்தின் ஹிரேகேரூா் தொகுதியில் வியாழக்கிழமை பாஜக வேட்பாளா் பி.சி.பாட்டீலை ஆதரித்து நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது: கா்நாடகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் பாஜகவுக்கு மட்டுமே அக்கறையில் உள்ளது. காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு இடைத் தோ்தலை நடத்த வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கிறதே தவிர, மாநிலத்தின் வளா்ச்சியில் அக்கறையில்லை.

கா்நாடகத்தில் இடைத் தோ்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. 6 மாதங்களுக்கு ஒருமுறை தோ்தலை நடத்துவது சாத்தியமா? என்பதை காங்கிரசும், மஜதவும் விளக்க வேண்டும். மாநிலத்தில் பெரும்பான்மை பலமில்லாத கட்சி ஆட்சியில் இருக்க வேண்டுமென்பதே எதிா்க்கட்சிகளின் எண்ணமாக உள்ளது. கா்நாடக மக்களின் நாடித்துடிப்பை எதிா்க்கட்சிகள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. ஹிரேகேரூா் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பி.சி.பாட்டீல் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT