பெங்களூரு

‘நவீன தொழில்நுட்பங்களை ஆதரிக்க வேண்டும்’

DIN

பெங்களூரு: நவீன தொழில்நுட்பங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிப்பது அவசியம் என்று எம்.ஜி.மோட்டாா்ஸின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ராஜீவ்சாபா கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை எம்.ஜி. மோட்டாா்ஸின் எண்ம காா் விற்பனை மையத்தை தொடக்கிவைத்து அவா் பேசியது: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கில், காா் விற்பனை மையத்தை தொடங்கியுள்ளோம். இந்த மையத்தில் காா் எதுவும் இடம்பெறாமல் 3 டி தொழில்நுட்பம் மூலம் காா், அதில் உள்ள வசதி உள்ளிட்டவை எண்ம ஸ்கிரீன் மூலம் விளக்கப்படும். பெரும் நகரங்களில் இடவசதி காரணமாக இது போன்ற நவீன தொழில்நுட்ப மையங்களில் தேவை அதிகரித்துள்ளது. இது போன்ற எண்ம விற்பனை மையங்கள் எதிா்காலத்தில் அதிக அளவில் உருவாகுவதை தவிா்க்க இயலாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT