பெங்களூரு

ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் இன்று முதல் நவராத்திரி உற்சவம்

DIN


பெங்களூரில் உள்ள ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் நவராத்திரி உற்சவம் மற்றும் ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளின் 85-ஆவது அவதார மஹோற்சவம் செப்.29-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரில் உள்ள ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூரு, மல்லேஸ்வரம், 11-ஆவது குறுக்குத்தெரு, 5-ஆவது மெயின், ஸ்ரீகாஞ்சி மகாசுவாமி சந்திரசேகரேந்திர சுவாமிகள் சாலையில் உள்ள ஸ்ரீகாஞ்சிசங்கரமடத்தில் செப்.29-ஆம் தேதி முதல் அக்.8-ஆம் தேதிவரை நவராத்திரி உற்சவம் மற்றும் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 85-ஆவது அவதார மஹோற்சவம் நடக்கவிருக்கிறது.  தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை பெங்களூரில் உள்ள பல்வேறு இசைப்பள்ளிகளைச் சேர்ந்த 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் கலைவிழா நடக்கிறது. 
 அதேபோல,  தினமும் மாலை 5.30 மணி முதல் மாலை 6.15 மணி வரை மஹாமஹோத்யாயா ஸ்ரீசத்யவாகீஸ்வர கணபதிகளால் தேவி மஹாத்யமம் நடக்கிறது.  இதைத் தொடர்ந்து, தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9மணி வரை இசை கச்சேரிகள் நடக்கின்றன.  செப்.29 ஆம் தேதி டாக்டர் கணேஷ் குழுவினரால் ஊத்துக்காடு நவவர்ண கிருத்திகள், செப்.30ஆம் தேதி அக்கரை சகோதரிகள் குழுவினர், அக்.1ஆம் தேதி டி.எம்.கிருஷ்ணா குழுவினர், அக்.2ஆம் தேதி சங்கீதா சிவக்குமார் குழுவினர், அக்.3ஆம் தேதி குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா குழுவினர், அக்.4ஆம் தேதி காயத்ரி வெங்கடராகவன் குழுவினரின் வாய்ப்பாட்டு, அக்.5ஆம் தேதி மைசூரு மஞ்சுநாத் மற்றும் மைசூரு  நாகராஜ் குழுவினரால் வயலின் இசை, அக்.6ஆம் தேதி அபிஷேக் ரகுராம் குழுவினரால் வாய்ப்பாட்டு, அக்.7ஆம் தேதி ராஜேஷ் வைத்யா குழுவினரால் வீணை இசை, அக்.8ஆம் தேதி சிக்கில் குருச்சரண் குழுவினரால் வாய்ப்பாட்டு இடம்பெறும்.  கூடுதல் விவரங்களுக்கு 9880766001 என்ற செல்லிடபேசியை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT