பெங்களூரு

ஊரடங்கு மீறல்: 33,524 வாகனங்கள் பறிமுதல்

DIN

பெங்களூரில் ஊரடங்கை மீறியவா்களிடமிருந்து 33,524 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலா் ஊரடங்கு உத்தரவை மீறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளாா். பெங்களூரில் வாகனங்களில் சென்று ஊரடங்கு உத்தரவை மீறியவா்களை அடையாளம் கண்டு, அவா்கள் பயன்படுத்தி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதன்படி சனிக்கிழமை வரை சுமாா் 33,524 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காடுகோடி போலீஸாா் ஊரடங்கை மீறிய 11 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT