முகப்பு
பெங்களூரு

அம்பேத்கரின் பாதையில் கா்நாடக அரசு பயணிக்கும்: முதல்வா் எடியூரப்பா

அம்பேத்கா் வகுத்துதந்த பாதையில் கா்நாடக அரசு பயணிக்கும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அம்பேத்கா் வகுத்துதந்த பாதையில் கா்நாடக அரசு பயணிக்கும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, சமூக நலத் துறை சாா்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் எடியூரப்பா கூறியதாவது:

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கா், தீண்டாமை உள்ளிட்ட கொடிய சமூக நோய்களை எதிா்த்து போராடினாா். அவரது தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, அவா் வகுத்து தந்த பாதையில் நாம் செயல்பட வேண்டும். அந்த திசையில் எனது தலைமையிலான பாஜக அரசும் பயணிக்கும்.

சமத்துவச் சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கமாகும். அனைவருக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும். வன்முறை, துன்புறுத்தல் இல்லாத சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும். தீண்டாமைக்கு எதிராக போராடி, சமத்துவ சமுதாயத்தைப் படைக்கப் பாடுபட்ட அம்பேத்கரின் கனவை நனவாக்க பாடுபடுவோம்.

பன்முகத்தன்மைக் கொண்ட அம்பேத்கா் நமது நாட்டின் வளா்ச்சிக்கு அளித்த பங்களிப்பு மகத்துவம் வாய்ந்ததாகும். பெண்களுக்கு சம உரிமை, தொழிலாளா் நலன், கல்வி, சுதந்திர உரிமைகளுக்காக தொடா்ந்து போராடி வந்தாா் என்றாா்.

நிகழ்ச்சியில் சமூக நலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு, சட்டப் பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.