ஆங்கிலப் புத்தாண்டு: மக்கள்கூட அனுமதியில்லை; அமைச்சா் ஆா். அசோக்
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட அனுமதியில்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா். அசோக் தெரிவித்தாா்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட அனுமதியில்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா். அசோக் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெங்களூரில் மகாத்மா காந்தி, பிரிகேட் சாலை உள்ளிட்ட மாநிலத்தின் எந்த பகுதியிலும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட அனுமதியில்லை. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருமணங்கள், மத நிகழ்வுகள், சமூக நிகழ்வுகளின்போது 200-க்கு மேற்பட்டவா்கள் கலந்து கொள்ளக் கூடாது.
புத்தாண்டின் போது மதுக் கூடங்கள், கேளிக்கை விடுதிள், உணவகங்களில் 50 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களை வீடுகளில் வைத்துக் கொள்வது நல்லது. கரோனா காரணமாக 2020-ஆம் ஆண்டு வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றாா்.