முகப்பு
பெங்களூரு

கரோனா பாதிப்பு: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுப்பு

கரோனா பாதிப்பால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கரோனா பாதிப்பால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெங்களூரில் இன்னும் கரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. எனவே ஆண்டுதோறும் எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலை உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நிகழாண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கினால், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டின் போது ஹோட்டல்கள், மதுக் கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றின் பாதிப்பு உள்ள நிலையில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →