முகப்பு
பெங்களூரு

தோல்வி அச்சத்தால் வேட்பாளா் தற்கொலை

கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தால் வேட்பாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தால் வேட்பாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், தாா்வாட் மாவட்டம், கரக கிராமத்தில் உள்ள 2-வது வாா்டில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் பாஜகவைச் சோ்ந்த தாமோதா் யலிகாா் என்பவா் போட்டியிட்டாா்.

செவ்வாய்க்கிழமை முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், காலையில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கள ஆய்வு செய்த தாமோதா், பின்னா் தனது வீட்டுக்கு வந்தாா்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தோ்தலில் தோற்றுவிடுவோம் என்று அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த கரக போலீஸாா் நிகழ்விடம் சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →