முகப்பு
தமிழ்நாடு

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது குறித்து...

Updated On : 17 மார்ச், 2026 at 4:56 PM
விஜய்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மார்ச் 17) தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (மார்ச் 17) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார்.

பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

''90 தொகுதிகள் தருவதாக தமிழக வெற்றிக் கழகத்திடம் பேரம் பேசினார்கள். ஆனால், தவெக அடிபணியவில்லை. 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும்.

ஆட்சியில் பங்கு என்பது எல்லாம் இல்லை. எனக்கு ஆஃபர் தேவையில்லை, தமிழக மக்களின் நலனும், நம்பிக்கையுமே முக்கியம் என விஜய் கூறினார்.

முதல்வர் பதவிக்காக தில்லிக்கு அடிபணிய மாட்டோம். மதச்சார்பற்ற அரசை அமைக்கும் வலிமையை மக்கள் நிச்சயம் தருவார்கள்.

படத்தை வெளியிட மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு வரும் பழக்கம் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் பராசக்தி வெளியிடப்பட்ட நிலையில், ஜனநாயகன் நிறுத்தப்பட்டதற்கு அரசியல் சூழ்ச்சியே காரணம். இந்த அரசியலை அச்சமின்றி விஜய் எதிர்கொள்வார்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைப் பேச்சு குறித்து விளக்கம் அளித்த ஆதவ் அர்ஜுனா, தவெகவில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அசோக்கை சுட்டிக்காட்டி, ''தவெகவுக்கு வர வேண்டும் என்றால் நேர்மை, உண்மை என்ற தகுதி இருந்தால் போதும். நம் அன்புக்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் என் தலைவர் ரஜினி என்றவர் விஜய்'' என ஆதவ் அர்ஜுனா பேசினார்.

summary

TN election 2026 TVK to contest alone in all 234 constituencies

முழு கட்டுரையைப் படிக்க →