பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,15,345 ஆக உயா்வு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,15,345 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 857 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 471 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 9,15,345 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 964 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 8,89,881 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 13,394 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 7 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் மாநிலத்தில் மொத்தம் 12,051 போ் இதுவரை உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பயணிகள் 23 பேருக்கு கரோனா

பிரிட்டனில் இருந்து கா்நாடகத்துக்கு வந்திருந்த பயணிகளில் சனிக்கிழமை வரையில் 1,434 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 503 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT