ஈரானைத் தாக்க ராணுவ உதவி மறுப்பு! ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை துண்டித்தார் டிரம்ப்!!
ஈரானைத் தாக்க ராணுவ உதவி மறுப்பு தெரிவித்த ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி...
உலகம்ஈரானைத் தாக்க ராணுவ உதவி மறுப்பு! ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை துண்டித்தார் டிரம்ப்!!
ஈரானைத் தாக்க ராணுவ உதவி மறுப்பு தெரிவித்த ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ஈரானைத் தாக்க ராணுவத் தளவாட உதவி செய்ய மறுப்பு தெரிவித்த ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாகத் துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த 28 ஆம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது.
ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கியது. ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 45-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்களில் இருந்து நடத்தப்பட்டன. அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகர்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது. இதனால், ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உள்ள முக்கியமான நாடுகளில் அமெரிக்காவும் ஸ்பெயினும் இடம்பெற்றுள்ளன. இதனால், அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோடா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது. இந்தப் போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு, ஸ்பெயின் அனுமதி மறுத்தது. இதனால் வேறு வழியின்றி அமெரிக்க தனது போர் விமானங்களை ஸ்பெயினில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவானது.
இந்தப் போர் ஒரு முடிவை எட்டாத நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தங்கள் ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்துவதக்கும் ஸ்பெயின் அரசு மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஸ்பெயின் - அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை முற்றிலும் துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், “ஈரானுக்கு எதிரான போரில் ராணுவ உதவிகளை செய்ய ஸ்பெயின் மறுத்துவிட்டது. ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்துக் கொள்கிறோம். இனி ஸ்பெயினுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இப்போது ஸ்பெயின் அவர்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டது. நாங்கள் விரும்பினால் அவற்றைப் பயன்படுத்துவோம். நாங்கள் அங்கு பறந்து செல்வோம். யாரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது” எனக் கடிந்து கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப்.