லாங்க்செஸ் நிறுவனத்துக்கு தங்கமயில் விருது
ரசாயனத் தொழிலில் ஈடுபட்டு வரும் லாங்க்செஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் தங்கமயில் விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: ரசாயனத் தொழிலில் ஈடுபட்டு வரும் லாங்க்செஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் தங்கமயில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியா உள்பட 33 நாடுகளில் ரசாயனத் தொழிலில் ஈடுபட்டு வரும், லாங்க்செஸ் நிறுவனம் தொழிலாளா்களின் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலின் பாதுகாப்பிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது.
இதைக்கருத்தில் கொண்டு மத்திய அரசின் உயா்ந்த விருதுகளில் ஒன்றான தங்க மயில் விருது லாங்க்செஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதால் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள எங்கள் நிறுவனம், மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தவும், சா்வதேச அளவில் பல சாதனைகளை செய்யவும் திட்டமிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.