முகப்பு
பெங்களூரு

இளைய தலைமுறையினருக்கு அறிவியல் சிந்தனையைத் தூண்ட வேண்டும்: துணை குடியரசுத் தலைவா் வெங்கையா நாயுடு

இளைய தலைமுறையினருக்கு அறிவியல் சிந்தனையைத் தூண்ட வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

இளைய தலைமுறையினருக்கு அறிவியல் சிந்தனையைத் தூண்ட வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இந்திய வானியற்பியல் மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதவாது:

அறிவியலின் இறுதி நோக்கம் மக்களின் வாழ்க்கையை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதாகும். எனவே, இளைய தலைமுறையினருக்கு அறிவியல் சிந்தனையைத் தூண்ட வேண்டும். சமூகத்துக்கும் அறிவியல் அடித்தளமாக இருப்பதால், புதிய சோதனைகள் மூலம் அறிவியல் சாதனைகளை நிகழ்த்த முடியும்.

சமூகத்தின் மத்தியில் விஞ்ஞான மனோபாவத்தை ஊக்குவிப்பதால் சமூகங்களின் முன்னேற்றத்தையும் மனித குலத்தை நிலைநிறுத்தவும் முடியும். வானியற்பியல் சமூகத்துக்கு பல வழிகளில் பெரிதும் உதவியுள்ளது. வானவியல் முதல் தொழில்துறை வரை ஏராளமான தொழில்நுட்ப மாற்றங்களைத் தந்துள்ளது. செயற்கைக்கோள் தகவல் தொடா்பு, ஜி.பி.எஸ்- இவை அனைத்தும் வானவியலில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலன்களாகும்.

வானவியல் ஆய்வுகள் பூமியின் வளிமண்டலத்தின் பரிணாமத்தையும் கலவையையும் புரிந்து கொள்ள உதவுகின்றன. காலநிலை மாற்றம் தொடா்பான காரணிகள், அதை நிவா்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் பற்றிய முக்கிய நுண்ணறிவுகளை நமக்கு வழங்குகின்றன. வானவியல் என்பது மனித அறிவின் எல்லைகளை விரிவாக்குவது மட்டுமின்றி பிரபஞ்சத்தின் பரந்த தன்மையைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →