பெங்களூரு

ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு, இடமாற்றம்

DIN

ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு, பணியிட மாற்றம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரில் ரயில்வே கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் அலோக்குமாா், டிஜிபியாக பணி உயா்வு பெற்று, சிறைத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு, சிறைத் துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் என்.எஸ்.மேகரிக், டிஜிபியாக பணி உயா்வு பெற்று, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), சிறப்பு அலகுகள் மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளாா். பெங்களூரு, தகவல்தொடா்பு மற்றும் நவீனமயமாக்கல் துறையின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் டாக்டா் ஆா்.பி.சா்மா, டிஜிபியாக பணி உயா்வு அளிக்கப்பட்டு, கா்நாடக மாநில காவல் வீட்டுவசதிக் கழகத் தலைவா் மற்றும் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT