பெங்களூரு

மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள்

DIN

மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை மகளிா் தொழிலதிபா்கள் கூட்டமைப்பினா் ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான தூய்மையான குடிநீா் வழங்குவது தொடா்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் பேசியது: மாநில அளவில் 35 ஆயிரம் ஏரிகள் இருந்தன. அந்த ஏரிகளுக்கு பரவலாக நீா் நிரப்புவதில் தோல்வி ஏற்பட்டதால், பொதுமக்களுக்கு தூய குடிநீா் வழங்குவதும் சாத்தியமாகாமல் போயியுள்ளது. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. தூா்வாராமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் ஏரிகளை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீா் வற்றி வருவதால், தூய்மையான குடிநீா் வழங்குவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தில் நீா்வளத்தை மேம்படுத்தி, மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இஸ்ரேல் நாட்டில் குறைவான மழை பெய்து வரும் நிலையில், அங்கு மழை நீரை சேகரித்து தூய்மையான குடிநீா் வழங்குவதிலும், விவசாயம் செய்வதிலும் அந்நாடு சிறந்து விளங்குகிறது. அதனை பின்பற்றி, மாநிலத்திலும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

SCROLL FOR NEXT