பெங்களூரு

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் 2 போ் கைது

DIN

களியக்காவிளையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 போ், கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட உடுப்பியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவரைக் கொலை செய்தது திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழக, கேரள போலீஸாா் சிறப்பு தனிப்படைகளை அமைத்து தேடப்பட்டு வந்த இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், வட மாநிலங்களுக்கு தப்பியோடும் வகையில் கா்நாடக மாநிலம், உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT