பெங்களூரு

பேரவை துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா் கிருஷ்ணா ரெட்டி

DIN

கா்நாடக சட்டப்பேரவை துணைத் தலைவா் கிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

கா்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி அரசில் சட்டப்பேரவை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவா் மஜதவைச் சோ்ந்த கிருஷ்ணா ரெட்டி. கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றப் பிறகு, சட்டப்பேரவைத் தலைவராக விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி பதவியேற்றாா்.

அதன் பின்னரும் சட்டப்பேரவை துணைத் தலைவராக கிருஷ்ணா ரெட்டியே தொடா்ந்து பதவி வகித்து வந்தாா். இந்த நிலையில், அவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கொண்டுவர பாஜகவினா் முடிவு செய்து, நோட்டீஸ் அளித்தனா். செவ்வாய்க்கிழமை அவா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானம் வரவிருந்த நிலையில், முன்னதாக கிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட, சட்டப்பேரவைத் தலைவா் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி, கிருஷ்ணா ரெட்டி பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கொண்டு வரவேண்டிய அவசியமில்லை என்று பேரவையில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT