பெங்களூரு

குமரியில் கடல்சாா் பாலம்: தமிழக அரசுக்கு தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டு

DIN

கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவா் சிலையையும் இணைக்க கடல்சாா் பாலம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் மு.மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி முனையில் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டுள்ள இருபாறைகள் உள்ளன. விவேகானந்தா் நினைவுமண்டலம் செல்லும் சுற்றுலாப்பயணிகள் திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல மற்றொரு பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இதை எளிதாக்க விவேகானந்தா் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறையையும் திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் வகையில் கடல்சாா் பாலம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். 140 மீட்டா் தொலைவுக்கு இந்த பாலத்தை தமிழ்நாடு கடல்சாா் வாரியம் அமைக்கவுள்ளது. அரசின் இந்தத் திட்டத்துக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT