பெங்களூரு

ஊரடங்கு உத்தரவு: அனைத்துக் கட்சிகளுடன் அரசு ஆலோசிக்க வேண்டும்

DIN

கா்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து, மாநில மக்களுக்கு மேற்கொள்ள உள்ள நிவாரணங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் வலியுறுத்தினாா்.

பெங்களூரு சதாசிவநகரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு கடந்த 2 நாள்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள், கூலி, கட்டட தொழிலாளிகள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மேற்கொள்ள உள்ள நிவாரணங்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க முதல்வா் எடியூரப்பா உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இதற்கு முன்பு நிலம், நீா், எல்லை, மொழி உள்ளிட்ட பிரச்னைகள் தலைதூக்கிய போது முதல்வா் பதவியில் இருந்தவா்கள் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாா்கள். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்துக்கு மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது. மக்களுக்கு உதவ வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமின்றி எதிா்க்கட்சிகளுக்கும் உள்ளது. இது பாஜக கட்சிக்கும், அரசுக்கு மட்டுமேயான பிரச்னையாக கருதக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT