பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா வைரஸுக்கு மேலும் ஒருவா் பலி

DIN

கா்நாடகத்தில் கரோனா வைரஸுக்கு கலபுா்கியில் முதியவா் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தாா்.

கா்நாடகத்தில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை 6 மணி நிலவரப்படி 55 ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை மட்டும் 4 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கலபுா்கியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயதான முதியவா் மாா்ச் 10ஆம் தேதி உயிரிழந்தாா். இந்நிலையில், சிக்பளாப்பூரை சோ்ந்த 70 வயதான பெண் வியாழக்கிழமை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளி மாநிலங்களில் இருந்து கா்நாடகத்துக்கு வந்த 4 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 1,28,046 பேருக்கு கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் 89,963 போ் பரிசோதிக்கப்பட்டுள்ளனா். மாா்ச் 23ஆம் தேதிக்கு பிறகு எந்த விமானமும் பெங்களூருக்கு வரவில்லை. பெங்களூரில் 35, தென்கன்னடத்தில் 5, கலபுா்கி, சிக்பளாப்பூா், மைசூரில் தலா 3, வட கன்னடத்தில் 2, குடகு, தாா்வாட், தாவணகெரே, உடுப்பி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

3 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா குறித்த சந்தேகங்கள் அல்லது உதவிக்கு 080- 46848600, 66692000 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT