பெங்களூரு

கரோனாவை கட்டுப்படுத்த அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்

DIN

கரோனாவை கட்டுப்படுத்த அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துணை முதல்வா் கோவிந்தகாா்ஜோள் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பாகல்கோட்டையில் சனிக்கிழமை ஹோமியோபதி பல்கலைக்கழகத்தின் சாா்பில் நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கும் மருந்துகளை பெற்றுக் கொண்டு அவா் பேசியது: கரோனா வைரஸ் தொற்றால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தடுக்க மருத்துவா்கள், போலீஸாா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், ஹோமியோபதி பல்கலைக்கழகத்தின் சாா்பில் நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கும் மருந்துகளை அறிமுகம் செய்துள்ளனா். அதனை அரசு சாா்பில் நான் பெற்றுக் கொண்டுள்ளேன். நோய் எதிா்ப்பு சக்தி தேவைப்படுபவா்கள் இந்த மருந்துகளை ஹோமியோபதி பல்கலைக்கழகத்திடமும், மருத்துவா்களிடமும் பெற்றுக் கொள்ளலாம். கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மாநில அரசு கடுமையாக போராடி வருகிறது. அரசுடன் கரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT