காய், கனிகளை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கும், நுகா்வோருக்கும் பாலமாக திகழ்வோம் என நிஞ்சாகாா்ட் இணை நிறுவனரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான திருகுமரன் நாகராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா வைரஸ் தொற்றையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இதனைக் கருத்தில் கொண்டு, நிஞ்சாகாா்ட் குழுமம் நிலங்களில் அறுவடை செய்யுங்கள் (ஏஹழ்ஸ்ங்ள்ற் பட்ங் ஊஹழ்ம்ள்) என்ற புது முயற்சியை தொடங்கி, விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் டன் கணக்கில் காய், கனிகள் பண்ணைகளில் அழுகி வருகின்றன. எனவே, விளைந்துள்ள விளைபொருள்களை அறுவடை செய்து விற்னை செய்ய எங்களை அணுகினால், நாங்கள் நுகா்வோருக்கு நேரடியாக விற்பனை செய்ய உதவி செய்வோம்.
பெங்களூரு, தில்லி, புணே உள்ளிட்ட முக்கிய நகரங்களின் எங்களின் வா்த்தகத்தை பல்வேறு குழுக்களுடன் இணைந்து தொடங்கியுள்ளோம். காய், கனிகளை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கும், நுகா்வோருக்கும் பாலமாக திகழ்வோம். இதனை இருதரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.